அத்தியாயம் : 4 அன்னிஸா – பெண்கள்
திருக்குர்ஆன் தமிழாக்கம் அத்தியாயம் : 4 அன்னிஸா – பெண்கள் மொத்த வசனங்கள் : 176 பெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது 'பெண்கள்' எனும் பெயர் பெற்றது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 1. மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த368 உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து504 ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். 2. அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள்! (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள்! அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்துச் சாப்பிடாதீர்கள்! இது மிகப் பெரிய குற்றமாக உள்ளது. 3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்...